மேலும் 22 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்தனர்

இலங்கையில் மேலும் 22 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து, வைத்தியசாலையிலிருந்து வெளியேறி உள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இதுவரையில் 679 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1880 ஆக அதிகரித்துள்ளதென சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

மேலும், இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்