ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்னும் போர்வையில் விபச்சார விடுதி: பெண்கள் உட்பட 08 பேர் கைது

கொழும்பு புறநகர் பகுதியான இரத்மலானையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது விபச்சார விடுதி நடத்திய குற்றச்சாட்டில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்னும் போர்வையில் விபச்சார விடுதி இயங்குவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட 08 சந்தேக நபர்களில் நான்கு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தேக நபர்கள் 27 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர்கள் மற்றும் இரத்மலனை, அம்பலாந்தோட்டை, மாத்தறை, கரந்தெனிய, கும்புறுப்பிட்டிய, திஸ்ஸமஹராம, கடுவத்தை போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்