அனைத்து பல்கலைக்கழகங்களின் 4 வது ஆண்டு பரீட்சை ஜூன் 22 முதல் ஆரம்பம்
இறுதி ஆண்டு பரீட்சைகளுக்காக ஜூன் 22 அன்று அனைத்து பல்கலைக்கழக நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என பல்கலை மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இறுதி ஆண்டு மாணவர்களுக்கான அனைத்து பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடங்களும் 2020 ஜூன் 15 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர், பரீட்சைகள் ஜூன் 22 முதல் ஓகஸ்ட் 15 வரை நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் மற்றைய மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் அதன் பின்னர் ஆரம்பமாகும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலால் ஏற்படும் அச்சுறுத்தலை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்கலைக்கழகங்கள் கடந்த 3 மாதங்களாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை