கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை

வெலிமடை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுகதலாவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியிலுள்ள இரட்டைமாடி வீட்டுக்குள் வைத்தே குறித்த நபர் (60 வயது) நேற்று (வெள்ளிக்கிழமை), கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர், ஒரு பிள்ளையின் தந்தையாவார். குடும்ப உறுப்பினர்கள் வெளியில் சென்றிருந்த  வேளையிலேயே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், இதன்பின்னணி என்னவென்பதை கண்டறிவதற்காக வெலிமடை பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் எவரேனும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்