இயக்கச்சிப் பகுதியில் மக்கள் வீதி மறியல் போராட்டம்!

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி கொற்றாண்டகுளம் பிரதேச மக்கள் வீதி மறியல் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டம் இன்று (சனிக்கிழமை) காலை 6.30 மணியளவில் பிரதேச மக்களால் கட்டைக்காடு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வீதி அபிவிருத்தி பணிகளுக்காக கிரவல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மறிக்கப்பட்டு குறித்த மறியல் போராட்டம் இடம்பெற்றது.

கொற்றாண்டகுளம் பகுதியில் அமைக்கப்பட்ட பாலத்தின் ஊடாக கிரவல் எடுத்துச் செல்வதினால் பாலம் சேதமடைந்து வருவதாகவும் தமது பிரதேசம் பாதிப்படையும் குறித்த வீதியால் போக்குவரத்துச் செய்யமுடியாத நிலை ஏற்படும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அபிவிருத்திப் பணிகளுக்காக கிரவல் எடுத்துச் செல்லும்போது குறித்த வீதியைப் பயன்படுத்த வேண்டாம் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, அப்பகுதிக்குச் சென்ற பளை பொலிஸார் பொதுமக்கள் மற்றும் வாகன உரிமையாளர்களுடன் நீண்டநேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அபிவிருத்தி இடம்பெறும் பகுதிக்கு கிரவல் எடுத்துச் செல்வதற்கு மாற்று பாதையைப் பயன்படுத்துவதாக இணக்கம் காணப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்