கொவிட்-19 தொற்றின் மிகப்பெரிய ஒருநாள் உயர்வைக் கண்டது தென்னாபிரிக்கா!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுகளில் தென்னாபிரிக்கா அதன் மிகப்பெரிய ஒற்றை நாள் அதிகரிப்பை கண்டுள்ளது.

சுகாதார அமைச்சின் கடந்த 24 மணித்தியால அறிக்கையின் படி, புதிதாக 3,359பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென்னாபிரிக்காவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான அதிகப்பட்ச ஒற்றை நாள் அதிகரிப்பு இதுவாகும்.

தென்னாபிரிக்காவில் ஒட்டுமொத்தமாக இதுவரை வைரஸ் தொற்றுக்கு 61,927பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1,354 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இது ஆபிரிக்க கண்டம் முழுவதும் கால் பகுதிக்கு மேலாகும்.

தென்னாபிரிக்காவின் மூன்றில் இரண்டு பங்கு தொற்றுகள் மேற்கு கேப் மாகாணத்தில் கேப் டவுன் நகரத்தை மையமாகக் கொண்டுள்ளன.

மேலும், 25,567பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 208பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதுதவிர 35,006பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்