இன்று நாடு திரும்பும் 111இலங்கையர்கள்

கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் 111பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை)  நாடு திரும்பவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய சென்னையில் இருந்து 109 பேர், மாலைத்தீவில் இருந்து ஒருவர் மற்றும் டோஹாவில் இருந்து ஒருவரே இவ்வாறு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்த மற்றுமொரு குழுவினர் இன்று, தங்களது வீடுகளுக்கு திரும்பவுள்ளனர்.

வஸ்கடுவ சிட்ரஸ் மற்றும் கல்பிட்டிய ருவல தனிமைப்படுத்தல் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களே இவ்வாறு  தங்களது வீடுகளுக்கு திரும்பவுள்ளனர்.

அந்தவகையில்,  இதுவரையில் 13,615 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்து, தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

அத்துடன் 44 தனிமைப்படுத்தல் முகாம்களில் 4463 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்