தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து இதுவரை 4463 பேர் வீடு திரும்பினர்

இராணுவ வீரர்களால் கட்டுப்படுத்தப்படும் 44 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து இதுவரை 4463 பேர் வீடு திரும்பியுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்து மேலும் 77 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடு திரும்பியுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  1,884 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம் இந்த கொடிய வைரஸ் தொற்றுக்கு உள்ளான 11 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்