ஈஸ்டர் தாக்குதல்: மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகும் ஞானசார தேரர்

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அவர், நாளை (திங்கட்கிழமை) இரண்டாவது தடவையாகவும் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.

இதேநேரம், காத்தான்குடி பகுதியில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கடும்போக்குவாத செயற்பாடுகள் குறித்து நாளை மறுதினம் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இதுவரை 176 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.

தாக்குதல் தொடர்பாக இதுவரை 771 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் ர்.N.டீ.P. ஹேரத் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.