கிளிநொச்சி பூநகரி வெட்டுக்காடு காட்டுப் பகுதியில் முதிரைக்குற்றிகளுடன் வாகனம் மடக்கிப் பிடிப்பு….

கிளிநொச்சி பூநகரி வெட்டுக்காடு காட்டுப் பகுதியில் முதிரைக்குற்றிகளுடன் வாகம் பிடிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பூநகரி பிரதேச செலகத்திற்கு உட்பட்ட வெட்டுக்காட்டு பகுதியில் சட்டவிரோதமாக காடுகளை அழித்து மதிரைக்குற்றிகள் கடத்தப்படுவதாக பூநகரி பொலிஸ்நிலைய புலனாய்வுத்துறையினருக்கு கிடைத்த  தகவலுக்கமைய பூநகரி பொலீசாரும் புலனாய்வத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்த போது பரம்மங்கிராய் பகுதியல் முதிரைக்குற்றிகளை ஏற்றிவந்த வாகனத்தினை வழிமறித்தனர்.
இதனை அவதானித்த சாரதி வாகனத்தை விட்டுத்தப்பி சென்றுள்ளார். என்றும் சாரதி இனங்காணப்பட்டுள்ளார் என்றும் பூநகரி பொலீசார் கூறினார்கள்.
 பிடிக்கப்பட்ட முதிரைக்குற்றிகள் 8 இலட்சம் பெறுமதி மிக்கவை என்றும் கூறியதுடன் மேலதிக விசாரையை கிளிநொச்சி பூநகரி பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்