கிளிநொச்சியில் பொதுமக்களை காணிக்குள் செல்லவிடாது தடுத்ததால் குழப்ப நிலை

கிளிநொச்சி – பூநகரி பகுதியில்,  மக்களுக்குரிய காணியை வனவள திணைக்களம் தமக்குரிய காணி என அடையாளப்படுத்தி பொதுமக்களை காணிக்குள் செல்லவிடாது தடுத்ததால்  மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து,  சம்பவ இடத்திற்கு விரைந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் நிலைமையை சுமுகமாக்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், பூநகரி கிராஞ்சி மொட்டையன் குளம் கிராமத்தில் மக்களுக்குரிய காணியை வனவள திணைக்களம் தமக்குரிய காணி என அடையாளப்படுத்தி நேற்று (சனிக்கிழமை) பொதுமக்களை காணிக்குள் செல்லவிடாது தடுத்ததால்  மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பொது மக்கள் சிலருக்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பொது மக்களின் அழைப்பை ஏற்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து அங்கு இடங்களை பார்வையிட்டதுடன், மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

மேலும் மக்களின் பாதிப்புகளை கேட்டறிந்து உரிய சட்ட நடவடிக்கைகளை தான் மேற்கொள்வதாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கியதுடன், நாளை திங்கட்கிழமை கிளிநொச்சி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குக்கு சட்ட உதவி வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.