தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த மேலும் 16 பேர் வீடு திரும்பினர்

கேப்பாப்புலவு – பூஸ்ஸ தனிமைப்படுத்தல் நிலையத்தில், தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த மேலும் 16 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

அவர்கள் நேற்று (சனிக்கிழமை) அங்கிருந்து வெளியேறியுள்ள நிலையில்,  அவர்களுக்கு தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை முறையாக நிறைவு செய்தமைக்கான சான்றிதழ் கடற்படையினரால் வழங்கப்பட்டது.

இந்நிலையில், இதுவரை பூஸ்ஸ தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை முறையாக நிறைவு செய்த 302 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

அதேபோல் 86 பேர் தொடர்ந்தும் அங்கு தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்