போதைப்பொருடன் 411 பேர் கைது

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது ஹெரோயினுடன் 170பேர் உட்பட 411பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (சனிக்கிழமை) காலை 6மணி முதல் இன்று காலை 5 மணி வரையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களுள் கஞ்சாவுடன் 88பேரும் ஐஸ் போதைப்பொருளுடன் 14பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சட்டவிரோத மதுபானத்துடன் 102பேர், கோடாவுடன் 18பேர் மற்றும் வேறு போதைப்பொருளுடன் 19பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்