சஜித்துக்கு எதிராக பாரிய கிளர்ச்சி ஆரம்பம்- மஹிந்தானந்த

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக பாரிய கலவரம் ஆரம்பமாகியுள்ளதாக என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த கலவரத்தில் தலைமைத்துவத்தை பெற்றுதருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க,  கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சஜித்தின் செயற்பாட்டால்தான், மங்கள சமரவீர பதவியை இராஜினாமா செய்ததாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்