நாடாளுமன்றம் குற்றவாளிகளின் புகலிடமாக மாறிவிட்டது- மங்கள

நாடாளுமன்றம் தற்போது நம்பகதன்மையற்ற குற்றவாளிகளின் புகலிடமாக மாறிவிட்டதென முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  மங்கள சமரவீர மேலும் கூறியுள்ளதாவது, “எந்த அரசியல் பயணத்திலும் தோல்வி சாத்தியம்.

நான் எனது அரசியல் வாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும் பல தோல்விகளை சந்தித்திருக்கின்றேன். ஆனால் தோல்வியை கண்டு ஒருபோதும்  தப்பியோடியதில்லை.

தோல்வியை நான் எப்போதும் வெற்றிக்கான படிக்கல்லாக பயன்படுத்தியிருக்கின்றேன்.1988 முதல் நான் அனைத்து நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்றிருக்கின்றேன்.

நான் பல வருடங்களாக மிகப்பெருமளவு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளேன். 2004 இல் 118,000 வாக்குகள் என்ற எனது சாதனையை என்னால் இம்முறை முறியடித்திருக்க முடியும் என நான் கருதுகின்றேன்.

அத்துடன் நாடாளுமன்றம், தற்போது நம்பகதன்மையற்ற குற்றவாளிகளின் புகலிடமாக மாறிவிட்டது” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.