ஐக்கிய தேசியக்கட்சி ஒரு மதத்தைப் போன்றது- அகிலவிராஜ் காரியவசம்

ஐக்கிய தேசியக்கட்சி ஒரு மதத்தைப் போன்றது. எனவே அதனை பாதுகாப்பதற்காக ஆதரவாளர்கள் நிச்சயம் வாக்களிப்பார்களென அக்கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம்  தெரிவித்துள்ளார்.

நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஐக்கிய தேசியக்கட்சியில்  திறமையானவர்கள் இருக்கின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சி, எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றியை தனதாக்குவதற்கு, கட்சியில் இருந்து பிரிந்து சென்ற முக்கியமானவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றது.

அந்தவகையில் கட்சியில் வந்து மீண்டும் இணைந்துக்கொள்ளுமாறு மாத்தறை மாவட்டத்திற்கான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் வேட்பாளர் மங்கள சமரவீரவுக்கும் ஐக்கிய தேசியக்கட்சி அழைப்பு  விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்