சட்டவிரோத பதாகைகள்- சுவரொட்டிகளை அகற்றும் பணி ஆரம்பம்

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுடன் தொடர்புடைய சட்டவிரோத பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் ஆகியவற்றை அகற்றும் நடவடிக்கைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் இந்த நடவடிக்கை நடைபெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடாத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் குறித்த நடவடிக்கையை கண்காணிப்பதற்கு, அனைத்து பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கும் பதில் பொலிஸ்மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்