படுகொலை செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சம்மேளனத்தின் தலைவருக்கு யாழில் அஞ்சலி

யாழ். மாவட்ட முச்சக்கர வண்டிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் படுகொலை செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சம்மேளனத்தின் தலைவர் சுனில் ஜெயவர்த்தனவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ். முச்சக்கர வண்டிகள் தரிப்பிடத்திற்கு முன்னால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஒன்று கூடிய முச்சக்கரவண்டி உறுப்பினர்கள் சிலர் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி, சுனில் ஜெயவர்த்தனவிற்கு அஞ்சலி செலுத்தியதுடன் அவரின் கொலைக்கு கண்டனம் வெளியிட்டனர்.

இதேவேளை, யாழ் மாவட்ட முச்சக்கர வண்டிகள் தரிப்பிடத்தில் வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன், சுனில் ஜெயவர்த்தனவின் கண்ணீர் அஞ்சலி பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அண்மையில் மிரிஹான பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதலில் சுனில் ஜெயவர்த்தன படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த பகுதியிலுள்ள வாகனங்களை குத்தகைக்கு விடும் நிறுவனமொன்றில் முச்சக்கரவண்டி ஒன்றை விடுவிப்பது தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இந்த தாக்குதல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்