வடமராட்சி கிழக்கில் வாள்வெட்டு மூவர் படுகாயம்; மக்கள் பதற்றம்!

வடமராட்சி கிழக்கு, குடத்தனை கிழக்கின் குலான் பகுதியில் இன்று மாலை இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இரண்டு தரப்பினர் மோதிக்கொண்டதுடன் இறுதியில் வாள்வெட்டுத் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது மூவர் படுகாயம் அடைந்தனர் எனவும், அவர்களில் இருவரின் நிலை ஆபத்தாகக் காணப்படுகின்றது எனவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

படுகாயம் அடைந்தவர்கள் நோயாளர் காவு வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தையடுத்து அப்பகுதியில் மக்கள் பதற்றத்தில் உள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.