113 ஆசனங்கள் பெறவே வக்கில்லை; மூன்றிலிரண்டு எப்படிக் கிடைக்கும்? – ராஜபக்ச அரசிடம் சஜித் அணி கேள்விக்கணை

“நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ச அரசு 113 ஆசனங்களைப் பெறுவதற்குக்கூட நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இப்படிப்பட்ட அரசு150 ஆசனங்களுடன் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை எப்படிப் பெறப் போகின்றது?”

– இப்படிக் கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் ஊடகத்துறை அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான கயந்த கருணாதிலக.

இந்த அரசின் தோல்விகள் குறித்து மக்கள் நன்கு அறிந்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பொதுத்தேர்தல் முடிவடைந்த பின்னர் அத்தியாவசியப் பொருட்களின் விலையை மீண்டும் அதிகரிப்பதற்கு இந்த அரசு திட்டமிடுகின்றது.

மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறும் நோக்கத்துடனேயே தேர்தல் பரப்புரையை அரசு ஆரம்பித்தது. எனினும், தற்போது 113 ஆசனங்களைப் பெறுவதற்குக்கூட அரசு நெருக்கடியைச் சந்தித்துள்ளது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு அனைத்து மக்களையும் பாதித்துள்ளது. மக்களை ஏமாற்றியே இந்த அரசு ஆட்சிக்கு வந்தது.

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி வலுவான கூட்டணியாக மாறி வருகின்றது” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.