கேகாலையில் பாரிய தீ விபத்து – 200 வர்த்தக நிலையங்கள் தீக்கிரை

கேகாலை மத்திய வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக 200 வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளன.

கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கேகாலை வர்த்தக மத்திய நிலையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 4 மணியளவில் இவ்வாறு திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து கேகாலை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விரைந்து செயற்பட்ட பொலிஸார் தீயணைக்கும் பணிகளை முன்னெடுத்தனர்.

இதன்போது கண்டி மற்றும் மாவனெல்ல தீயணைப்பு படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த நிலையில், சுமார் 4 மணித்தியால போராட்டங்களுக்குப் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீப்பரவலின் காரணமாக வர்த்தக மத்திய நிலையத்தில் சுமார் 200 வர்த்தக நிலையங்கள் வரை முற்றுமுழுதாக தீக்கிரையாகியுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.

மின் கசிவின் காரணமாகவே தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என கேகாலை பொலிஸார் சந்தேகம் தெரிவித்த கேகாலை பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்