வவுனியாவில் வீடு புகுந்து வாள் வெட்டு: பெண் உட்பட ஐவர் காயம்

வவுனியா – மகாறம்பைக்குளம் பகுதியில் மெற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணியளவில் உள்நுளைந்த சிலர் அங்கிருந்தவர்களை வாளால் வெட்டியதுடன், வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களையும் தாக்கி சேதப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் பெண் உட்பட ஐந்து பேர் காயமடைந்த நிலையில், நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருவதுடன், சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.