ஓமந்தையில் கிணற்றிலிருந்து செல்கள் மீட்பு!!

வவுனியா- ஓமந்தை, நாவற்குளம் பகுதியில் வீட்டு கிணற்றில் இருந்து வெடிபொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள கிணறு ஒன்றை நீண்டகாலத்தின் பின்னர் வீட்டின் உரிமையாளர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) துப்புரவு செய்துள்ளார்.

இதன்போது குறித்த கிணற்றில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்த வீட்டின் உரிமையாளர், ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இரண்டு ஆர்.பி.யி ரக செல்லினையும்  ஒரு மோட்டார் செல்லினையும் மீட்டனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட வெடிபொருட்கள், இன்றையத்தினம் செயலிழக்க செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0Shares

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்