நிகழ்வில் கலந்துகொள்ள சென்ற முன்னாள் ஜனாதிபதி திருப்பி அனுப்பப்பட்டார்

பொலனறுவை பௌத்த மையத்திற்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அங்கிருந்து திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பொலனறுவை மாவட்டத்தில் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கான சான்றிதல்கள் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்வுக்காக இன்று (திங்கட்கிழமை) அவர் சென்றபோதே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன இம்முறை இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் பொதுஜன முன்னணி சார்பாக பொலனறுவை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.

இந்நிலையில், இந்த நிகழ்வு தேர்தல்கள் சட்டத்தை மீறி இடம்பெறுவதாக குறித்த இடத்திற்கு வருகைத்தந்த தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அங்கிருந்து வெளியேறுவதற்கு முன்னர் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஇ ‘இந்நிகழ்வு தேர்தல் சட்டத்தை மீறி இடம்பெறுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. எனவே தேர்தல் சட்டத்தை மதிக்கின்றேன். எனவே பொதுத்தேர்தல் நிறைவடைந்தது குறித்த சான்றிதல்களை வழங்கி வைப்பேன்’ என்று அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.