மேற்குலக சக்திகளின் ஆலோசனைக்கு அமையவே மங்கள செயற்படுகின்றார்- பந்துல
நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, மேற்குலக சக்திகளின் ஆலோசனைகளை அடிப்படையாக கொண்டே செயற்படுகின்றாரென அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நீண்டகாலமாக மங்கள சமரவீரவிற்கு ஆதரவளித்து வரும் மேற்குலக சக்திகளின் ஆலோசனையின் அடிப்படையிலேயே அவர் நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அத்துடன் மங்கள சமரவீர, மாத்தறையில் தேர்தலில் போட்டியிட்டால் அதில் நிச்சயம் தொல்வியடைவார். அவரது தோல்வி வெளிநாட்டு சக்திகளின் தோல்வியாகவே அமையும்.
இதனால்தான் மேற்குல சக்திகள் போட்டியிடவேண்டாமென அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளன. மேலும் மங்கள, தனிநபர் இல்லை அவர் பல மேற்குலக நாடுகளால் ஆதரவளிக்கப்படும் நபராவார்” என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை