தேர்தல் திகதி அறிவிப்பின் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முதல் கூட்டம் நாளை!

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் தேர்தல்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையிலான முதல் கூட்டம் இடம்பெறவுள்ளது.

அதற்கமைய இந்த கூட்டம்  இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை)  இடம்பெறவுள்ளது.

ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் முதற் தடவையாக நாளை ஒன்றுகூடவுள்ளனர்.

இதன்படி நாளைய கூட்டத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் ஒத்திகை நிகழ்வுகளின் முன்னேற்றங்கள் குறித்து ஆராயப்படவுள்ளது.

அதேநேரம் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய தேர்தலை நடத்துவது குறித்து ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.