சஹரான் குழுவுடன் எவ்வித தொடர்பும் இல்லை – ஹக்கீம்

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சந்தேகநபர் சஹரான் ஹாசீம் குழுவுடன் தமது அரசியல் கட்சிக்கு எவ்வித தொடர்பும் இல்லை என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கண்டி- பிலிமந்தலாவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகாண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனினும் ஈஸ்டர் தாக்குதலின் பின்னர், முஸ்லிம்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் இவ்வாறு தங்களது கட்சியின் மேல் குற்றம் சுமத்துவதாக தெரிவித்துள்ள அவர், இவ்வாறான குழுவொன்று தங்களுடன் இருப்பதை யாரும் அறிந்திருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.