மருந்துகளின் விலைகளை அதிகரிக்கும் மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை

அனுமதியின்றி மருந்துகளின் விலைகளை அதிகரிக்கும் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை வெளியிட்டுள்ள ஊ்டக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, மருந்துகளின் விலைகளை, ‘அனுமதியின்றி அதிகரிக்கும் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எழுத்துமூலம் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் அனுமதியின்றி மருந்துகளின் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு எந்தவொரு நிறுவனத்திற்கும் சட்டபூர்வ அதிகாரம் வழங்கப்படவில்லை.

ஆகவே இதனை மீறி செயற்படும் நிறுவனங்களுக்கு எதிராக வழக்குதாக்கல் செய்யப்படும்’ என குறித்த அறிக்கையில் ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.