சாந்தி, மற்றும் சத்தியலிங்கம் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலத்தில் விசேட வழிபாடு

விஜயரத்தினம் சரவணன்
தமிழ்தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட வேட்பாளர்களான திருமதி.சாந்தி சிறீஸ்கந்தராசா மற்றும் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோர் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் 15.06.2020 இன்றையநாள் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

குறிப்பாக அவர்களுடைய தேர்தல் பிரச்சாரத்திற்குரிய விளம்பர அட்டைகள் பூசையில் வைக்கப்பட்டு விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

மேலும் இந்த விசேடவழிபாடுகளில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோரும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்