ஆரம்பப் பாடசாலைகளைத் திறக்க தீர்மானம்

சுகாதார அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனைகள் மற்றும் வரையறைகளுக்கு உட்பட்டு ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் ஜுலை முதலாம் திகதி முதல் ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு நிலையங்கள் என்பன திறக்கப்படவுள்ளன.

இதற்கான ஆலோசனைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் 19,500 ஆரம்பப் பாடசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்யப்பட்டுள்ள 1,500 சிறுவர் பாதுகாப்பு நிலையங்கள் நாட்டில் இயங்குவதாக மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நீல் பண்டார தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து, ஆரம்ப பாடசாலைகள் உட்பட நாட்டின் அனைத்து பாடசாலைகளும் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.