நீா் இறைக்கும் இயந்திரங்களை திருடிவந்த சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

யாழ்.கோப்பாய் பொலிஸ் பிாிவுக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் நுழைந்து நீா் இறைக்கும் இயந்திரங்களை திருடிவந்த 4 சந்தேகநபர்களையும்  விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த சந்தேகநபர்களை நேற்று (திங்கட்கிழமை) பொலிஸார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியப்போது, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் சந்தேகநபர்களிடம் இருந்து  4 நீா் இறைக்கும் இயந்திரங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.