வாழைச்சேனை கடதாசி ஆலையில் வேலை பெற்றுதருவதாக சிலர் பொய் கூறுகின்றனர் – ஜெயானந்தமூர்த்தி

தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக மீறி   சில அரசியல் வாதிகள் வாழைச்சேனை கடதாசி ஆலையில் வேலை பெற்றுதருவதாக, வீடுகள் அமைத்து தருவதாக காணிகள் பெற்றுத்தருவதாக விண்ணப்பங்களை சேகரித்து மக்களுக்கு  பொய்யான வாக்குறுதிகளை வழங்கி பிரச்சசாரங்களில் ஈடுபடுகிறார்கள் என ஸ்ரீ பொதுஜன பெரமுனை வேட்பாளரும் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடியில்  நேற்று (திங்கட்கிழமை)  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”இம்முறை பொதுஜன பெரமுனவை ஆதரிப்பதென்ற வகையில் எமது மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள் ஏனென்றால் கடந்த வருடங்களில் உங்களுக்கு நன்றாக தெரியும் இங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு சரியான சேவைகளை செய்யவில்லை என்றவொரு குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் இருக்கின்றது.

ஜனநாயக முறைப்படி மக்களுடன் பழகி மக்களை அனுகி வாக்குப்பெறுவதே முறையான விடயம். ஆனால் அந்த மாதிரியான ஏமாற்று விடயங்களை சில அரசியல் வாதிகள் சில கட்சிகள் செய்து வருகின்றார்கள். இதனால் மக்கள் ஏமாற்றமடைவதுடன் மக்கள் அலைச்சலுக்குள்ளாகிறார்கள்.

தூர இடங்களில் இருந்து கூட மட்டக்களப்பு நகருக்கு வந்து இந்த விண்ணப்பங்களை பெறுகிறார்கள். ஆனால் தேர்தல் காலங்களில் வேலைகளை பெற்றுக் கொடுக்கவும் நியமனங்களை வழங்கவும் முடியாது

கடதாசி ஆலையை பொறுத்தவரையில் அங்கு இப்பொழுது துப்பரவு வேலைகள் தான் நடைபெறுகின்றது. ஆனால் சிலர் அங்கு பல ஆயிரம் வேலை நியமனங்களை பெற்றுத் தருவதாக கூறி பிரச்சசாரங்களில் ஈடுபடுகிறார்கள்” என அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.