கொரோனா தொற்றிலிருந்து மேலும் 29 பேர் குணமடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் மேலும் 29 பேர் குணமடைந்ததுள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் இதுவரை 1371 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 1905 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதில் 523 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்