சி.ஐ.டி.யினர் எடுத்துச் சென்ற தரிஷா பஸ்ரியனின் மடிக்கணினியை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு

சி.ஐ.டி.யினரால் கைப்பற்றப்பட்ட சண்டே ஒப்சர்வரின் முன்னாள் ஆசிரியர் தரிஷா பஸ்ரியனின் மடிக்கணினியில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய அரச பகுப்பாய்வாளருக்கு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் ஊழியர் ஒருவர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் கடத்தல் தொடர்பான விசாரணையில் பஸ்ரியனின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு தலைமை நீதவான் முன் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது.

இதன்போது சி.ஐ.டி. 2020 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் திகதிக்கு முன்னர் இரண்டு முறை பஸ்ரியனின் இல்லத்திற்குச் சென்றனர் என ஹம்தான் ஹுசைனுடன் ஆஜரான லா ஷிராஸ் நூர்தீன் மற்றும் பசன் வீரசிங்க ஆகிய சட்டத்தரணிகள் நீதவனுக்கு தெரிவித்தனர்.

இந்நிலையில் மடிக்கணினியில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என தரிஷா பஸ்ரியன் சார்பாக ஆஜரான சட்டத்தரணி விண்ணப்பம் செய்திருந்தார்.

மடிக்கணினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஆதாரமாகக் குறிக்கப்பட்டபோது, ஜூன் 4 முதல் ஜூன் 16 வரை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய மடிக் கணினியை முழுமையாக ஆய்வு செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் லங்கா ஜயரத்ன அரச பகுப்பாய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் மடிக்கணினி கைப்பற்றப்படுவதற்கு வழிவகுக்கும் நிகழ்வுகளை சான்றளிப்பதற்காக சி.ஐ.டி.க்கு கணினியை அனுப்பிய நபர் 2020 ஜூலை 21 அன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் என்றும் நீதவான் உத்தரவிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.