வாக்குகளைச் சிதறடிக்கவே வன்னியில் பல அரசியல் கட்சிகள் – சாந்தி

  • எதிர்வரும் பொதுத்தேர்தலில் வன்னி மாவட்ட வாக்குகளைச் சிதறடிக்கும் நோக்கில் திட்டமிட்டு பல அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா குற்றம் சுமத்தியுள்ளார்.

    எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தேர்தல் பிரசார நடவடிக்கைகளை நேற்று ஆரம்பித்தார்.

    வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் பூஜைகளில் கலந்துகொண்ட அவர், தொடர்ந்து மக்கள் சந்திப்புகளிலும் ஈடுபட்டார்.

    பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர், “பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கொழும்புக்கு அடுத்ததாக வன்னியிலேயே அதிக அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளன.

    மக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள வன்னியில் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. இது வன்னி மாவட்ட வாக்குகளைச் சிதறடிக்கும் நோக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாகும்” என மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.