கதிர்காம யாத்திரைக்கு அனுமதி வழங்கக் கோரி முன்னாள் பா.உ யோகேஸ்வரன் ஜனாதிபதிக்குக் கடிதம்

கொரோணா தொற்று பரவல் காரணமாக சுகாதார விதிமுறைகளை பேணுதலைக் கருத்திற்கொண்டு இம்முறை கிழக்கிலிருந்து பாதயாத்திரை செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவருமாகிய சீனித்தம்பி யோகேஸ்வரன் அன்றைய தினம் ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

கதிர்காம முருகன் ஆலய வருடாந்த உற்சவத்திற்கு பாதை யாத்திரை செல்வதில் அடியார்கள் மேற்கொள்ளும் சிரமநிலையினை விளக்கியும், யாத்திரையின் முக்கியத்துவம் பற்றியும், அதற்கு விதிக்கப்பட்ட தடையினை ஏற்றுக்கொள்ள முடியாததென்றும், சுகாதார விதிகளை கடைப்பிடித்து அடியார்கள் யாத்திரையை மேற்கொள்வர் என்றவாறான விடயங்களை உள்ளடக்கியதாகவும், யாத்திரைக்கான அனுமதியினை வழங்கக் கோரியும் இக்கடிதம் வரையப்பட்டுள்ளது.

இதேவேளை உரியவர்களுடன் தொலைபேசியூடாக அழைப்பினை ஏற்படுத்தியும் இவ்விடயங்களைத் தெரிவித்து அனுமதியளிக்கக் கேட்டுக்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.