நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை

இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 1915 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இறுதியாக அடையாளம் காணப்பட்டவர்கள் இலங்கை கடற்படையைச் சேர்ந்த ஒருவரும் ஈரானில் இருந்து வந்த ஒருவரும் என தெரிவிக்கப்படுகிறது.

இதுதவிற நேற்றைய தினம் மேலும் 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். குறித்த 08 பேரில் 05 பேர் கடற்படையினர் என்றும் 03 பேர் ஈரானில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேநேரம் நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 1371 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதேநேரம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.