தேர்தல் திகதி அறிவிப்பின் பின்னர் ஜனாதிபதிக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் முதல் சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் இன்று (புதன்கிழமை) கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் அதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து தேர்தல் திகதியை நிர்ணயிப்பதில் பெரும் சர்ச்சை எழுந்திருந்தது. அதனையடுத்து, 2020ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி தேர்தல் நடக்கவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.

இவ்வாறு தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் இடம்பெறவுள்ள முதலாவது கலந்துரையாடல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்