முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 17 பேர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 17 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய முன்னாள் அமைச்சர்களான அர்ஜூன ரணதுங்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க உள்ளிட்ட 17 பேர் இன்று (புதன்கிழமை) ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளனர்.

அவன்காட் நிறுவனத்தை தன்னிச்சையான முறையில் கையகப்படுத்தியதன் காரணமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, அதன் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக சாட்சியங்களை வழங்குவதற்காகவே அவர்கள் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளனர்.

அதேநேரம் முன்னாள் கடற்படை தளபதி ரவிந்திர விஜேகுணரத்ன, ஜனாதிபதி சட்டத்தரணி டளஸ் விக்கிரசிங்க, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, முன்னாள் ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.ஏ.டி.குணவர்தன, துதினன் கொமாண்டர் டபில்யூ.எச்.பீ.வீரசிங்க, ரியர் அட்மிரல் ஜே.ஜே.ரணசிங்க, ரியர் அட்மிரல் நிலந்த ஹீனடிகல, ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, காலி துறைமுக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இந்துக டி சில்வா, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் அலுத்கே செனரத் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் லசந்த ரத்நாயக்க, வசந்த நவரத்ன பண்டார, அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக பண்டார ஆகியோரும் இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.