எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மனிதாபிமானமற்றவர்கள் – கெஹலிய

அரசாங்கத்தின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மனிதாபிமானமற்றவர்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கொரோனா வைரஸை ஒழிப்பதில் கவனம் செலுத்துவதே புதிய அரசாங்கத்தின் முக்கிய திட்டம் என்றும் குறிப்பிட்டார்.

ஆட்சிக்குவந்து 6 மாதங்கள் கடந்துவிட்டதாகவும், தற்போதைய அரசாங்கம் எவற்றியும் செய்யத் தவறிவிட்டதாகவும் கூறி அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது எதிர்க்கட்சியின் இயலாமையை காட்டுவதாகவும் அவர் கூறினார்.

புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் படிப்படியாக பணிகள் தொடங்கியதாகவும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தாம் முன்வைத்த கொள்கைகளை செயற்படுத்த அரசாங்கத்திற்கு ஒரு மாதம் கூட இருக்கவில்லை என்றும் கெஹலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டினார்.

அப்போதிருந்து, வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும், வேறு எந்த நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

இதேவேளை எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமது தரப்பினருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்காது என்றும் இந்த நிலையில் அதற்கு மேலும் சிலரின் ஆதரவு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ,வேறு தரப்பினரின் ஆதரவை பெறாமல் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை மாற்ற முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.