பொதுச் செயலாளராக ஜீவன், உப தலைவராக அனுஷியா நியமனம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமானும் உப தலைவராக அனுஷியா சிவராஜாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக இருந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவையடுத்து கட்சியின் நிர்வாக நடவடிக்கைகளுக்காக இடைக்கால நிர்வாக சபை ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அந்த இடைக்கால நிர்வாக சபை இன்று (புதன்கிழமை) காலை 09 மணிக்கு ஒன்று கூடிய நிலையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், கட்சித் தலைமைத்துவத்துக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.

முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவையடுத்து, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமைப் பதவிக்கு வெற்றிடம் உருவானது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.