உயர்தரப் பரீட்சை திகதியில் மாற்றம் – சுசில் பிரேமஜயந்த

உயர்தர பரீட்சையை நடத்த தீர்மானித்த திகதியில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

ஆசிரியர்கள், மாணவர்களின் அபிப்பிராயத்தை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “உயர்தர பரீட்சையினை நடத்த ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்ட திகதியில் மாற்றம் ஏற்படவுள்ளது. மாணவர்கள் பரீட்சைக்கு தயாராகுவதற்கு காலவகாசம் வழங்கப்படும்.

இவ்விடயம் தொடர்பாக கல்வி அமைச்சும் பரீட்சைகள் திணைக்களமும் விரைவில் உரிய தீர்மானத்தை அறிவிக்கும். ஆசிரியர்கள், மாணவர்களின் கருத்துக்கள் பரிசீலனை செய்யப்படும்” என மேலும் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.