5000 ரூபாய் கொடுப்பனவில் முறைகேடு – கணக்காய்வு ஆரம்பம்

ஊரடங்கு காலப்பகுதியில் வழங்கப்பட்ட 5,000 ரூபாய் கொடுப்பனவில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக கணக்காய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

5,000 ரூபாய் கொடுப்பனவு உரிய முறையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக இந்த கணக்காய்வு முன்னெடுக்கப்படுவதாக கணக்காய்வாளர் நாயகம் விக்ரமரத்ன தெரிவித்தார்.

பிரதி கணக்காய்வாளர் நாயகத்தின் கீழ் பிராந்திய மட்டத்தில் கணக்காய்வு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதியில் பொருளாதார சிக்கல்களுக்கு உள்ளானவர்களுக்கு 5000 ரூபாய் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.

இதன்போது பல முறைகேடுகள் இடம்பெற்றதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.