மணல் அகழ்விற்கு தடை – பாரவூர்தி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு பேராட்டம்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, மணற்காட்டு பகுதியில் மணல் அகழ்வதற்கு உள்ளூர் பாரவூர்த்தி உரிமையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து இன்று (புதன்கிழமை) காலை கவனயீர்ப்பு பேராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மணற்காட்டுப் பகுதியில் உள்ளூர் பாரவூர்த்தி உரிமையாளர்களுக்கு மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 40க்கும் மேற்பட்ட பாரவூர்த்திகளுக்கு திடீரென மணல் அகழ்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அத்துடன் பாரவூர்த்தி சங்கத்தின் சில வாகனங்களுக்கு அரசியல் கட்சி சார்பாக பாரவூர்த்திகளுக்கு மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையிலேயே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த உள்ளூர் பாரவூர்த்தி உரிமையாளர்கள் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமக்கான அனுமதியை வழங்கக் கோரியதுடன் மணல் அகழ்வில் ஈடுபட்ட பாரவூர்த்திகளை இடைமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.