கஞ்சிபானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல்

மாளிகாவத்தை பகுதியில் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் கஞ்சிபானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாளிகாவத்தை ஜூம்மா பள்ளிவாசல் சந்தியில் நேற்று (புதன்கிழமை) மாலை அடையாளந்தெரியாத மூவர் கூரிய ஆயுதங்களால் குறித்த நபரை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த கஞ்சிபானை இம்ரானின் தந்தை சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது உடல் பூராகவும் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர்களில் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்ட கஞ்சிபானை இம்ரான், நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.