அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் ஆணை வழங்கினால் புனிதமான அரசியல் பயணத்தை மேற்கொள்வேன்.டாக்டர் தமிழ்நேசன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் டாக்டர் அ.தமிழ்நேசனின் பிரச்சாரக்கூட்டம் தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் இருந்து இறை வழிபாடுகளுடன்   புதன்கிழமை(17) ஆரம்பமாகி இருந்தன.

அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தமிழரசு கட்சியின் முதலாம் இலக்க வேட்பாளர் அ.தமிழ்நேசன் இன்று காலை சுபநேரத்தில் ஆலய வழிபாடு செய்து தேங்காய் உடைத்து தனது தேர்தல் பிரச்சாரத்தினை ஆரம்பித்து இருந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தமிழரசு கட்சி வேட்பாளரும் ஆயூர்வேத வைத்தியருமான டாக்டர் அ.தமிழ்நேசன் கருத்து தெரிவிக்கையில் இந்த தேர்தலில் மக்களின் ஆணை கிடைக்கின்ற போது மக்களின் மனங்களை வெற்றி கொள்ளக்கூடிய நிலையில் நேர்மையாக நேர்த்தியான எனது அரசியல் பணிகளை முன்னெடுப்பேன் என தெரிவித்து இருந்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் எனது அரசியல் பயணம் வெருமனே பாராளுமன்ற தேர்தலுக்காக அமைந்ததில்லை இன விடுதலை போராட்ட காலம் தொடக்கம் ஜனநாயக போராட்டம் வரை எனது தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவன் எனது தாய் தந்தையரும் இன விடுதலைப் போராட்டங்களுக்காக வாழ்நாள் முழுவதையும் செய்து இருந்தவர்கள்.எனவே நான் சிறுவயதில் இருந்து தமிழ் மக்களின் மனங்களின் வடுக்களை நன்கு அறிந்து வைத்து இருக்கின்றேன்.

இந்நிலையில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் எனக்கு ஆணை வழங்கி பாராளுமன்ற செல்வதற்கான சந்தர்ப்பத்தினை வழங்குகின்ற நிலையில் எனது அரசியல் பணிகள் புனிதமானதாகவும் மக்களுக்கான ஆரோக்கியமான வாழ்வை அமைத்துக் கொடுப்பதற்கான குரலாக ஒலிப்பேன் என வேட்பாளர் அ.தமிழ்நேசன் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.