கனடா புன்னகை அமைப்பினரினால் வவுனியாவில் உதவித் திட்டம்…
June 18th, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டது.
கனடா புன்னகை அமைப்பினரினால் வவுனியாவில் உள்ள சிதம்பர நகரில் வசிக்கும் இருபது குடும்பத்தினருக்கு சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான தகரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.13.06.2020 சனிக்கிழமை மாலை நான்கு மணிக்கு இந்த உதவி வழங்கும் நிகழ்வு கனடா புன்னகை அமைப்பின் வவுனியா இணைப்பாளர் திரு.ரவி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
வவுனியாவில் இயங்கி வரும் அட்சயம் அமைப்பினரிடம் சிதம்பர நகரில் உள்ள ‘எழுச்சியின் கரங்கள்’ பெண்கள் அமைப்பினர் தமது பகுதியில் உள்ள ஒழுகுகின்ற வீடுகளுக்கு தகரங்கள் தந்துதவுமாறு கோரிக்கை விடுத்தன் அடிப்படையில்
‘அட்சயம்’ அமைப்பினர் கனடா புன்னகை அமைப்பினரிடம் விடுத்த கோரிக்கையை ஏற்று உதவமுன்வந்தனர். இந் நிகழ்வில் புன்னகை அமைப்பின் வவுனியா அமைப்பாளர் திரு.ரவி மற்றும் அட்சயம் அமைப்பினரும் கலந்து கொண்டிருந்தனர். 


|
கருத்துக்களேதுமில்லை