கிளிநொச்சியில் இருந்து தம்புள்ளைக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 20 கிலோ கஞ்சா வவுனியாவில் மீட்பு: ஒருவர் கைது….

கிளிநொச்சியில் இருந்து தம்புள்ளைக்கு சிறிய ரக சொகுசு பட்டா வாகனத்தில் சூட்சுமான முறையில் எடுத்துச் செல்லப்பட்ட 20 கிலோ கஞ்சா வவுனியா பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று  காலை 10 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சியில் இருந்து தம்புள்ளை நோக்கி சென்ற சிறிய ரக சொகுசு பட்டா வாகனம் வவுனியா, புதிய பஸ் நிலையம் அருக்கில் பயணித்த போது வவுனியா பொலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சூட்சுமான முறையில் வாகனத்தின் பின் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. அவை ஒவ்வொன்றும் 2 கிலோ வீதம்  10 பொதிகளாக மீட்கப்பட்டது. குறித்த கஞ்சா பொதிகளை கொண்டு சென்றமை தொடர்பில் அவ் வாகனத்தின் சாரதியான 31 வயதுடைய பொலனறுவையைச் சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த வாகனத்திற்கு பாதுகாப்பாக சென்ற சொகுசு கார் வாகனமும் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விசாரணைகளின் பின் குறித்த நபரையும், கஞ்சாவையும் வவுனியா நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.    


 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.