மத்திய வங்கி பிணைமுறி மோசடி: ரணில், மைத்திரி உட்பட நால்வரிடம் வாக்குமூலம்


மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, முன்னாள் பிரதமரின் ஆலோசகர் எஸ். பாஸ்கரலிங்கம் மற்றும் மக்கள் வங்கியின் முன்னாள் பொது முகாமையாளரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரினால், பதில் பொலிஸ்மா அதிபருக்கு இவ்வாறு பணிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் நிஷாரா ஜயரத்ன இதனைத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.