ஊழல் அதிகாரிகளை இனங்காண்பது பெரும் சவாலாக இருக்கின்றது- சட்டமா அதிபர்

ஊழல் அதிகாரிகளை இனங்காண்பது தற்போதைய சூழ்நிலையில் பெரிய சவாலாக இருக்கின்றதென  சட்டமா அதிபர்  தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொழும்பிலுள்ள ரிமாண்ட் சிறையை நேரில் சென்று தப்புல டி லிவேரா பார்வையிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அங்குள்ள அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார். பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் தப்புல த லிவேரா மேலும் கூறியுள்ளதாவது, “நான்   இந்த பதவியில் இருப்பதை எண்ணி பெருமையடைகின்றேன்.

நாட்டில் சுமார் 6000க்கு மேற்பட்ட கைதிகள் உள்ளனர். ஆனால் கைது செய்யப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 17,500யை கடந்துள்ளது.

மேலும் சிறைச்சாலைகள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு நல்ல அபிப்பிராயம் இருக்க வேண்டும்.

அந்தவகையில் சிறைத்துறையில் நேர்மையான அதிகாரிகள் இருக்க வேண்டும்.

இதேவேளை ஊழல் அதிகாரிகளை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக இருக்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்